Monday, March 15, 2010

காதல் சுவடு


அன்று ,
நச் என்று இதழ் பதித்தாய் - நின்
இதழோர புன்னைகையுடன் காதலோடு !
இன்றும் ,
நச் என்று இதழ் பதிக்கிறாய் - அதில்
காதல் இல்லை ...
காமம் இல்லை ...
புரிதலும் இல்லை ..!

வேண்டும் ,
மீண்டும் ஒரு முறை - உனது
இதழச்சு .!!

ஆம் ,
தனித்திருக்கிறேன்
தவித்திருக்கிறேன்
ஏக்கங்களுடன்

மீண்டும்,
நினது - அதே
பழைய காதலின் சுவடிற்காக ..........

சொன்னது நீ தானா..!


அன்று
என் கனவுகளுக்கு
சுவை ஊட்டியவனே -எந்தன்
உயிர் நீ தானடி என்று
இன்று
என் விழிகளுக்கு
சுமை ஏற்றியவனே - ஏன்
என் உயிரை எடுக்கிறாய் என்று
இன்னும் புரியவில்லை
சொன்னது நீ தானா ..!

Friday, March 12, 2010

வலி

வார்த்தைகளால் உண்டான
வலியை எழுத்தில்
சொல்லி விடலாம் -- உன்னால்
உண்டான எண்ணத்தின்
வலியை எப்படியடா சொல்வது ..?

இதய புத்தகம்

தொலைந்த
உனது இதய புத்தகத்தில்
கிழித்தெறியப்பட்ட
பக்கமாய் நான்..!

Monday, March 8, 2010

ஏனோ

ஏனோ !
துரத்தி வந்தாய் எனை - நீ
வந்த பாதை பார்த்து - நான்
வருகையில் வெறுத்து
ஓடுகிறாய் - ஏனோ ?!...

Tuesday, March 2, 2010

முதற்காதல்

ஆரம்ப கால அதிசயமே
உன்னை மறக்க முடியவில்லை
நான் உன்னைப் பார்த்த பொழுது
சில சமயம் கண்களை மூடியது
பாதிக்கண்கள் திறந்து பார்த்தது
பார்த்து பரவசமானது
ஆச்சர்யப்பட்டது
காணமல் கண்களால் தேடியது
சொல்லியது சொல்லாமல் விட்டது
சொல்ல எண்ணித் தேடியது
காலம் காலமாய்
கவிதைகள் தந்தது - நான்
கற்றுக் கொண்டது ஏராளம்
மறக்க முடியவில்லை - இப்பொழுதெல்லாம்
வயது ஏறி தலை வெளுத்து
மகளுக்கு கல்யாணம் - பேரன்
பிறந்து இருக்கான் - நீங்க
வாங்க -
வரிங்களா -
வரையா - வாடா - என
எதை சொல்லலாம்
என மௌனம் காத்தது
இன்னமும்
உன்னை மறக்க முடியவில்லை ..!

Wednesday, February 10, 2010

படித்தவை, கேட்டவை ,
தொட்டவை, சுட்டவை,
பார்த்தவை , ரசித்தவை - என
அனைத்தும் பகிரப்படும் .
உங்களின் மனதோடு மனதாக
மனதின் மனதாக
மனதின் ரகசியங்களை
பகிர்ந்து கொள்ள எத்தனிக்கிறேன் ....
இன்று முதல் ......