யாருமற்ற மௌனத்தில்
இரவில் கரைந்தொழுகும்
உன் நினைவின் பிம்பங்கள்
வென்றேடுக்கிறது என்னை...
களைந்தெடுக்க இயலா
கனவென
பித்தெறிய முடியா
பச்சை குத்திய ரணமென
உன்னால் கிளர்ந்தெழும்
ஏன் மன உணர்வின் தழும்புகளை
பிறர் காணக் கூடுமோ
எனும் அச்சத்தின் விளிம்பில்
தத்தளிக்கிறேன்!
உன்னை தவிர்க்க
உள்ளுக்குள் மட்டுமே
உணர்வுகளை ஒளித்து வைத்து
ஏளனப் பார்வை ஒன்றை
உன்மேல் வீசி கடக்கிறேன்!
ஆயினும், உறைய வைக்கவே
இயலவில்லை ...
இமை மூடிய கண்ணுக்குள்ளும்
இதழ் மூடிய இதயத்துள்ளும்
நீ எழுப்பும் மெல்லிய
சலன அதிர்வுகளை...!
படித்ததில் பிடித்தது
இரவில் கரைந்தொழுகும்
உன் நினைவின் பிம்பங்கள்
வென்றேடுக்கிறது என்னை...
களைந்தெடுக்க இயலா
கனவென
பித்தெறிய முடியா
பச்சை குத்திய ரணமென
உன்னால் கிளர்ந்தெழும்
ஏன் மன உணர்வின் தழும்புகளை
பிறர் காணக் கூடுமோ
எனும் அச்சத்தின் விளிம்பில்
தத்தளிக்கிறேன்!
உன்னை தவிர்க்க
உள்ளுக்குள் மட்டுமே
உணர்வுகளை ஒளித்து வைத்து
ஏளனப் பார்வை ஒன்றை
உன்மேல் வீசி கடக்கிறேன்!
ஆயினும், உறைய வைக்கவே
இயலவில்லை ...
இமை மூடிய கண்ணுக்குள்ளும்
இதழ் மூடிய இதயத்துள்ளும்
நீ எழுப்பும் மெல்லிய
சலன அதிர்வுகளை...!
படித்ததில் பிடித்தது

No comments:
Post a Comment