Monday, June 30, 2014

என் காதல் சொல்ல இயலாமல் 
தவிக்கிறேன் - அதனாலே 
தவிர்க்கிறேன் - உனது பார்வையை - நீ 
வரும் திசை நோக்கி தவமிருக்கும் நான் 
இப்பொழுதெல்லாம் எதிர்திசையில் செல்கிறேன் 

 வேண்டும்  நீ
 மீண்டும் ஒரு முறை என் வாழ்வில் 
வேண்டும் நீ - என்னோடு 
சண்டையிட - என் மீது 
கோபம்கொள்ள - என் 
இதழணைக்க  - என் நெற்றி 
முத்தமிட - என் 
சுவாசக்காற்றை மாறிட - என் 
உயிராக வேண்டும் நீ.....

Sunday, June 29, 2014

எப்படி சொல்வதடா
என் காதல் சொல்ல வந்தேன்- நீயும் 
சொன்னாய் உன் காதலை - ஆம் 
அவளுடனான உன் காதலை ... 
நான் - என்  காதலை  
எப்பொழுது எப்படி சொல்வதடா ..?!

Wednesday, June 25, 2014

காத்திருப்பு 
நீ வரும் 
திசை நோக்கியே - என் விழிகள் 
பூத்திருக்கின்றன ..
உன் சுவாச காற்றை 
எதிர்நோக்கியே - என் நாசி 
சுவாசிக்கின்றது ..
நீ போகும் வழியெங்கும் - உன் 
பாத சுவடுகளுடன் சேர - என் 
ஜீவன் காத்திருக்கின்றது ....


என் காதலை சொல்ல 
இயலாமல் ... தனியே 
துடித்து கொண்டிருக்கிறது 
என் இதயம் - உனக்காக....
உன்னை எதிர்பார்த்து 
தன்னந்தனியே நின்று கொண்டிருக்கிறது 
உனக்கான எனது காதல் ...
நீ வரும் திசை நோக்கி ...

Wednesday, January 1, 2014

one of my pencil sketch